சென்னையை உருக்குலைய வைத்த இரட்டைக் கொலை.. 100 சவரன் நகைகள் மாயம்? தடயம் சிக்கியது!

10 months ago 114
ARTICLE AD BOX
Double

சென்னையை உருக்குலைய வைத்த இரட்டைக் கொலை.. 100 சவரன் நகைகள் மாயம்? தடயம் சிக்கியது!

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்தா மருத்துவர் சிவன் நாயர். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல நேற்று இரவு தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவன் நாயர் மகன் ஹரி ஓம் ஶ்ரீ வீட்டில் இருந்து நண்பர்களை பார்க்க சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: BSNL அதிகாரி வீட்டில் துணிகரம்.. 50 சவரன் நகைகள் கொள்ளை : CCTV காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்!

சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த இவர்களது வீட்டில், 100 சவரனுக்கும் மேல் நகை காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன் மனைவி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நகை பணத்திற்காக கொலையா.? அல்லது குடும்ப தகராறா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் எங்கும் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது .

அதே நேரத்தில் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆவடியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The station சென்னையை உருக்குலைய வைத்த இரட்டைக் கொலை.. 100 சவரன் நகைகள் மாயம்? தடயம் சிக்கியது! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article