சென்னைவாசிகளை கடுப்பில் ஆழ்த்திய கூலி படக்குழு? எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது!

1 month ago 22
ARTICLE AD BOX

பட்டையை கிளப்பும் பாடல்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படத்திற்கு இந்தியா முழுவதிலும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் புரொமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

Coolie power house third single launch in hyderabad

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “Chikitu”, “மோனிகா”  ஆகிய இரண்டு பாடல்களும் சிங்கிள் பாடல்களாக வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

சிங்கிள் வெளியீட்டு விழா

அதாவது இத்திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கென்றே தனி வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது படக்குழு. “கூலி பவர் ஹவுஸ்” என்று தொடங்கும் இப்பாடலின் வெளியீட்டு விழா வருகிற ஜூலை 22 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஹைதராபாத்தின் Quake Arena என்ற இடத்தில் வைத்து படக்குழுவினர் வெளியிட உள்ளார்கள். இது சென்னை ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இந்த வெளியீட்டு விழாவுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

Brace yourselves!🔥 The #Coolie third single #PowerHouse – Song launch event is happening at Quake Arena, Hyderabad on July 22 at 9:30 PM! 💥😎#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @shrutihaasan @Arivubeingpic.twitter.com/vfV9Do5FWm

— Sun Pictures (@sunpictures) July 17, 2025
  • Coolie power house third single launch in hyderabad சென்னைவாசிகளை கடுப்பில் ஆழ்த்திய கூலி படக்குழு? எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது!
  • Continue Reading

    Read Entire Article