ARTICLE AD BOX
நடிகர் சூர்யா கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் எதுவும் வரவேற்பை பெறாததால், அடுத்த படமான ரெட்ரோ மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படியுங்க : குட் நியூஸ் சொல்லும் கீர்த்தி சுரேஷ்…. ஆச்சரியத்தில் திரையுலகம்.!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நாளை ரெட்ரோ படத்தின் இன்னொரு பாடல் வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் 30 நொடி ஓடக்கூடிய ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளார். இந்த பாட்டு குத்துப் பாட்டாக வெளியாகியுள்ளது.
— karthik subbaraj (@karthiksubbaraj) March 20, 2025ரெட்ரோ படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வரும் மே 1ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. கங்குவா பட தோல்விக்கு பின் வெளியாகும் சூர்யா படத்திற்கு ரசிகர்கள் வரவேற்கை கொடுக்க உற்சாகமாக காத்திருக்கின்றனர்
