ARTICLE AD BOX
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
விளாங்குடி பகுதியில் உள்ள இருக்கக்கூடிய சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் எதிரே உள்ள கலையரங்கத்திற்கான மேற்கூரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் செல்வராஜ் கலந்துகொண்டு சுவாமி தரிசனத்திற்கு பிறகு பூமி பூஜையில் கலந்து கொண்டார்
தொடர்ந்து செய்தியாளர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குறிப்பாக பாஜக கூட்டணி உரத்த கேள்விகளை எழுப்பதற்கு முயற்சி செய்யும்போது, செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் இதை மட்டும் போடுங்கள் தலைவா என்று தனக்கே உரித்த பாணியில் கூறிவிட்டு வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
பாஜக அதிமுக கூட்டணி பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய வேலையில் அவ்வப்போது அண்ணாமலை குறித்து விமர்சனங்கள் செய்து வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது பாஜக கூட்டணி என்று அறிவித்த பிறகு செய்தியாளர்களை சந்திக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

6 months ago
74









English (US) ·