ARTICLE AD BOX
டாப் நடிகை
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு மயோசிட்டீஸ் என்ற அரிய வகை நோய் இருப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அந்த நோய்க்கான சிகிச்சையையும் எடுத்துக்கொண்டு வருகிறார் சமந்தா.
“சுபம்” என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்த சமந்தா தற்போது “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மொபைல் ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்தது குறித்த ஒரு அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப்! என்ன காரணம்?
“ஒரு முறை 3 நாட்கள் என்னுடைய மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன். யாருடனும் தொடர்புகொள்ளவில்லை. யாருடனும் பேசவில்லை. எவரையும் பார்க்கவுமில்லை. புத்தகமும் படிக்கவில்லை. எந்த வேலையையும் செய்யாமல் எனது மூளைக்கு முழு ஓய்வை கொடுத்தேன். அந்த 3 நாட்களும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன்.
என்னுடைய ஈகோவுக்கும் செல்ஃபோனுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றியது. நான் யார்? என்ன சாதித்தேன்? என்பதை எனது செல்ஃபோன்தான் சொல்கிறது. அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண ஆளாக உணர்ந்தேன். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்ஃபோன் நம்மை செயற்கையான விஷயங்களுக்குள் தள்ளி விடுகின்றது. நமது சுய முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் செல்ஃபோன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்” என கூறியுள்ளார். இவரது இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.