ARTICLE AD BOX
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று பேர் அமைச்சர் பொன்முடி ஜி ஆர் பி தெருவில் நாளை நீர் மோர் பந்தல் திறக்க உள்ளதால் அவ்விழாவிற்கு செலவு செய்ய செல்போன் கடைக்கு சென்று பணம் கேட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
சசிந்திரன் என்பவர் பணம் கேட்டபோது கடையின் உரிமையாளர் இல்லாததால் கடையில் பணிபுரியும் பணியாளரிடம் அமைச்சர், மாவட்டசெயலாளர், எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் திறப்பதால் கட்டாயம் பணம் கொடுத்து தான் ஆகவேண்டும் இல்லையெனில் கடையினை மற்றொரு பூட்டினை போட்டு பூட்டுவேன் என கரை வேட்டி அணியாத நபர் தெரிவிக்கிறார்.

அப்போது திமுக கரை வேட்டி இரு நபர்கள் கொடுத்துடுங்கள் பா கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
செல்போன் கடையில் பணம் கேட்டு மிரட்டிய திமுகவினர்!#Trending | #DMK | #DMK_Fails | #DMKLiquorScam | #updatenews360 pic.twitter.com/MvGUJHfrtu
— UpdateNews360Tamil (@updatenewstamil) March 15, 2025இந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.