ARTICLE AD BOX
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க அமித்ஷா மயிலாப்பூர் வந்திருந்தார்.
இதையும் படியுங்க: அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!
அப்போது மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலவர் செல்வபபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டும், கருப்பு நிற புறாக்களை பறக்கவிட்டும், புகைப்படத்தை தீ வைத்து எரித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய செல்வப்பெருந்தகை மது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுமார் 3 பிரிவுகளின் கீழ் 192 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

6 months ago
131









English (US) ·