’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!

2 days ago 6
ARTICLE AD BOX

தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

வைசாக்: 1990களில் நடிகர் சௌந்தர்யாவைப் பற்றி அறியாத திரைப்பட ரசிகர்களே இல்லை என்று கூறலாம். கன்னடப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சௌந்தர்யா, தமிழ், தெலுங்கு, கன்னட உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் திரையுலகில் உச்சத்தை அடைந்தார்.

ஆனால், அடுத்த தலைமுறை கதாநாயகிகள் வந்த பிறகு, சௌந்தர்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நேரத்தில் சௌந்தர்யா எடுத்த ஒரு முடிவு அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. படங்களில் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், சௌந்தர்யா அரசியலில் நுழைய நினைத்தார். இதற்காக அவர் பாஜகவில் சேர்ந்தார்.

அப்போது, 2004 பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக, பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது, சௌந்தர்யா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சௌந்தர்யாவுடன் சேர்ந்து, அவரது சகோதரரும் விபத்தில் இறந்தார்.

Soundarya Death Case rumors

இருப்பினும், அவரது மரணத்திற்கு மோகன் பாபுவை குற்றம் சாட்டி ஒருவர் கடிதம் எழுதியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிபாபு என்பவர், நடிகை செளந்தர்யா திரைப்பட துறையில் உச்சத்தில் இருந்தபோது ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் ஆறு ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார்.

தற்போதை சந்தை மதிப்பில் அது ரூ.100 கோடிக்கு மேல் ஆகும். அந்த விருந்தினர் மாளிகையை தனக்கு விற்க நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, நன்கு திட்டமிட்டு சௌந்தர்யாவையும், அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்ததாக சிட்டிபாபு குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. சீமானுக்கு தைரியம் சொன்ன அண்ணாமலை.. எதற்காக தெரியுமா?

செந்தர்யா இறந்த பிறகு அந்த விருந்தினர் மாளிகையை மோகன்பாபு குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், அதில்தான் தற்போது மோகன்பாபு இருப்பதாகவும்,
எனவே தற்போது மஞ்சு டவுனில் உள்ள அந்த விருந்தினர் மாளிகையை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும் என்றும், மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுத்து, விருந்தினர் மாளிகையை பறிமுதல் செய்யுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். தற்போது, ​​இந்த விவகாரம் தொடர்பாக சிட்டிபாபு எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து மோகன்பாபு தரப்பில் கொடுக்கப்படும் விளக்கத்தைப் பொறுத்து, இதில் மேற்கொண்டு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Soundarya Death Case rumors ’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!
  • Continue Reading

    Read Entire Article