ARTICLE AD BOX
அனிருத் இசைக்கச்சேரி
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்க: தனுஷ் இயக்கத்தில் அஜித்தா…தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்.!
இன்று (மார்ச் 23) ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாளில் இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.மதியம் 3 மணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மேலும் இன்னொரு ஆட்டமான இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் அளவிற்கு,சென்னை – மும்பை மோதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு.இந்த போட்டி தொடங்குவதற்கு முன்,ரசிகர்களுக்கு இசை விருந்து காத்திருக்கிறது.பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்,போட்டி தொடங்குவதற்கு முன் இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
இன்று மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற உள்ள இந்த இசைக்கச்சேரியில்,விஜய்யின் ‘லியோ’ படத்தின் ‘Badass’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் ‘Hukum’ மேலும் பல பிரபல பாடல்களை அவர் தனது இசைக்குழுவுடன் இணைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.
Anirudh Getting Ready for Tomorrow 🔥#MSDhoni #CSKvMI pic.twitter.com/9Eonvpg8BK
— Chakri Dhoni (@ChakriDhonii) March 22, 2025இதற்காக அனிருத் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் ரிகர்சல் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.