சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

1 month ago 42
ARTICLE AD BOX

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் என ஒருசிலர் கூறி வருகின்றனர்.

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று வந்த நிலையில் இது உறுதியாக உள்ளதாக பேச்சுகளும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க: கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

அதே சமயம், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினமா செய்வேன் என அழுத்தமாக கூறியிருந்தார் அண்ணாமலை.

இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அண்ணாமலை பாஜக தலைவராக ஆன பிறகு கட்சியின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயம் டெல்லி மேலிடத்துக்கு தெரியும். ஆனால் இபிஎஸ் வைத்த முக்கிய நிபந்தனைகளில் முதல் நிபந்தனையே அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதுதான். இதனால் பாஜகவும் இதற்கு சம்மததித்துள்ளது.

இதனிடையே டெல்லி சென்ற அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி உறுதியனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், டெல்லி மேலிடத்துக்கு சுலபமாகிப் போயுள்ளது.

இந்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து தலைவர் ஒருவரை தேர்வு செய்ய பரிசீலனை செய்து வருவதாக பாஜக மேலிட வட்டாரங்கள் கூறியுள்ளது. அந்த பட்டியலில் முதலில் உள்ளவர் நயினார் நாகேந்திரன்.

இவர் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு பெருவாரியான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

New Posting for Annamalai Bjp Announced

அதே சமயம், நயினாருக்கு எதிராக கருப்பு முருகானந்தம் பெயரும் அடிபடுகிறது. இவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பட்டியலில் பெயர் உள்ளது. குறிப்பாக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இவரது பெயரை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Vanathi Srinivasan and Tamilisai names in TN Bjp Leaders List

தமிழக பாஜக தலைவர் பட்டியலில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பெயரும் உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்த நிலையில், அவரின் பெயரும் அடிப்பட்டுள்ளது.

இதனிடையே அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்போ அல்லது மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும், வரும் 9ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…
  • Continue Reading

    Read Entire Article