ARTICLE AD BOX
இசை புத்தர்
இசைஞானி என்று பலராலும் கொண்டாடப்படும் இளையராஜா, மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருபவர். அவரது உருவத்திற்குதான் வயதானதே ஒழிய அவரது இசை எப்போதும் இளமையாகவே இருக்கிறது. இசை துறையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள இளையராஜா சமீபத்தில் லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.
சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு இளையராஜா தமிழகம் வந்தபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

சொன்னதை செய்த முதல்வர்
அந்த வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி இளையராஜாவின் பொன்விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த பாராட்டு விழா மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இளையராஜாவின் பாராட்டு விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த அறிவிப்பால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
