ARTICLE AD BOX
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள் ஒரு புதிய உணவு டெலிவரி ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பல நாட்களாகவே நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் இடையே கமிஷன் பிரச்சனை தலைதூக்கி இருந்தது. மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் ஆகியவற்றால் வரும் லாபத்தில் 50% பாதிப்பு ஏற்படுவதாக நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் பிராது எழுப்பி வந்தனர்.
இந்த பிரச்சனைகளை சரிசெய்யக்கோரி சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களிடம் நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கைகளை அந்நிறுவனங்கள் பரிசீலனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு பதிலாக ZAAROS என்ற புதிய செயலியை நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இச்செயலியை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து அம்மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தினர்.