சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

2 weeks ago 13
ARTICLE AD BOX

சச்சின் ரீரிலீஸ்

2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் “சச்சின்” திரைப்படமும் மறுவெளியீடு ஆனது. 

sachein movie re release  box office collection report

“சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்களின் விருப்பத்திற்குரிய திரைப்படம் என்பதால் மறுவெளியீட்டிற்கான அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. 

குவியும் வசூல்

“சச்சின்” திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்நாள் வரை ரூ.7 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படம் அதிக நாள் வசூலாக ரூ.15 கோடியை தொடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர். 

சென்ற ஆண்டு மறுவெளியீடு செய்யப்பட்ட “கில்லி” திரைப்படம் ரூ.26 கோடியை அள்ளியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது அடுத்த ஆண்டு விஜய்யின் “தெறி” திரைப்படமும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. 

sachein movie re release  box office collection report

“ஜனநாயகன்” திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இனி விஜய் திரைப்படங்களை ரீரிலீஸில் பார்க்கவே வாய்ப்புள்ளது. இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றாலும் Nostalgic உணர்வுகளை கொடுக்க கூடிய விஜய்யின் பழைய திரைப்படங்கள் வெளிவருவதும் ஒரு புது Vibe-ஐ தருவதாக Gen Z தலைமுறை ரசிகர்கள் கூறுகின்றனர். 

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?
  • Continue Reading

    Read Entire Article