சோறு போட்ட தென்னிந்திய சினிமாவை கண்டபடி விமர்சித்த ஜோதிகா… வலுக்கும் கண்டனம்!

6 days ago 7
ARTICLE AD BOX

நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

பெரும்பாலும், தமிழ் படத்தில் நடித்து வந்த ஜோதிகா, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன், அர்ஜூன், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு? தீராத வலி : துடிதுடித்து போன உயிர்.. வைரலாகும் பதிவு!

இந்த நிலையில் வாழ்க்கையை கொடுத்த தென்னிந்திய சினிமாவை விமர்சித்துள்ளார் ஜோதிகா. அவர் சமீபத்திய பேட்டியில், பாலிவுட் சினிமாவை கம்பேர் செய்யும் போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம்.

ஆண் கதாபாத்திரத்தை மையாக கொண்டு எழுதப்படுவதுதான் அதிகம். பெண் கதாபாத்திரம் சும்மா ஹீரோவுக்கு ஜோடியாக டான்ஸ் ஆடவும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வது மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.

Jyothika Says south indian movies are patriarchy

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஜோதிகா ஏற்ற கதாபாத்திரங்கள் எண்ணற்றவை. அவர் திருமணம் செய்யும் முன்பே, சிநேகிதியே, பச்சைக்கிளி முத்துச்சரம், சந்திரமுகி, மொழி போன்ற நாயகிக்கு முக்கியமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார்.

Jyothika Slams Southern Film Industry

இதை தவிர திருமணத்திற்கு பின் மகளிர் மட்டும், 36 வயதினிலே, ராட்சசி என பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார். இந்த படங்களுக்கும் வரவேற்பு உள்ள போது ஏன் இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் கடிந்து வருகின்றனர்.

  • Jyothika Slams Southern Film Industry சோறு போட்ட தென்னிந்திய சினிமாவை கண்டபடி விமர்சித்த ஜோதிகா… வலுக்கும் கண்டனம்!
  • Continue Reading

    Read Entire Article