சோறுதானே திங்குற- தொகுப்பாளினியிடம் அத்துமீறிய பத்திரிக்கையாளரை விளாசும் ரசிகர்கள்  

1 day ago 5
ARTICLE AD BOX

ஐஸ்வர்யா ரகுபதி

தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும் கூட. பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது “குற்றப்பரம்பரை” வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். 

reporter asked controversial question to anchor aishwarya ragupathi

அத்துமீறிய பத்திரிக்கையாளர்

இந்த நிலையில் “அம்பி” என்ற திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பை தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ரகுபதி. அப்போது ஐஸ்வர்யா ரகுபதி “நாம் நமது உடலை சரியாக பேணிக்கொள்வது இல்லை. சினிமாவில் இருப்பவர்களும் மீடியாவில் இருக்கும் நாமும் தூக்கம் இல்லாமல் உழைக்கிறோம். ஆதலால் நம் உடலை பேணிக்காப்பது முக்கியம். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்” என்பது போன்ற அறிவுரைகளை கூறினார். 

அதன் பின் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரகுபதியிடம், “பத்திரிக்கையாளர்களாகிய எங்களுக்கு நன்றாக அட்வைஸ் செய்தீர்கள். வெயில் காலத்தில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறினீர்கள். நீங்கள் போட்டிருக்கும் உடை கூட வெயிலுக்கானது என நினைக்கிறேன்” என்று கேட்டார்.

reporter asked controversial question to anchor aishwarya ragupathi

அதற்கு ஐஸ்வர்யா ரகுபதி, “கொஞ்சம் தெளிவாக உங்கள் கேள்வியை முன் வைக்க முடியுமா?” என்று கேட்க, அப்பத்திரிக்கையாளர், “நீங்கள் அணிந்திருக்கும் உடை வெயில் காலத்திற்கு ஏற்ற உடைதான் என நினைக்கிறேன். சரியா?” என்று மறுபடியும் அக்கேள்வியை முன் வைத்தார்.

“என் உடையை பற்றி ஏன் பேசவேண்டும். நாம் அம்பி என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருக்கிறோம்” என தயங்கியபடியே கூறினார் ஐஸ்வர்யா. அப்போது பத்திரிக்கையாளர் “நீங்கள் அம்பி திரைப்படத்தை தாண்டி எங்களுக்கு அட்வைஸ் செய்தீர்கள்தானே” என கேட்க, 

அதற்கு ஐஸ்வர்யா ரகுபதி, “ஹீரோ சார் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது என்று சொன்னார். ஆதலால்தான் அவ்வாறு அட்வைஸ் செய்தேன். இதற்கும் நான் அணிந்திருக்கும் உடைக்கும் என்ன சம்பந்தம்?” என கேட்டார். 

“நான் உங்கள் உடையை பற்றி தவறாக பேசவில்லையே. நீங்கள் அணிந்திருக்கும் உடை வெயிலுக்கு சரியான உடையா என்றுதானே கேட்டேன். அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லலாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லலாம்” என பத்திரிக்கையாளர் கூற, அதற்கு ஐஸ்வர்யா ரகுபதி, “இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை, Sorry” என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். 

இந்த நிகழ்வு வீடியோ துணுக்காக வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ரகுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “சோறுதானே திங்குற”, “இந்த கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை அங்கேயே கண்டித்திருக்க வேண்டும்” என்று அந்த பத்திரிக்கையாளரை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஒரு சினிமா பிரஸ் மீட்டில் முதல் கேள்வியே எப்படி கேக்குறானுக பாருங்க..

அந்த பொண்ணு நினைச்சு இருந்தா சாணியை கரைச்சு மூஞ்சு மேல ஊத்துற மாதிரி பதில் சொல்லி இருக்கலாம்..டிசண்டா பதில் சொல்லிடாங்க..

இதைதான் பிராத்தல் ஊடகம் என சொல்கிறோம். pic.twitter.com/QgrxMQtsX4

— 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) May 7, 2025
  • reporter asked controversial question to anchor aishwarya ragupathi சோறுதானே திங்குற- தொகுப்பாளினியிடம் அத்துமீறிய பத்திரிக்கையாளரை விளாசும் ரசிகர்கள்  
  • Continue Reading

    Read Entire Article