ஜனநாயகன் பட பாடலை தீயாக பாடிய விஜய்…. பட்டையை கிளப்பும் அப்டேட்!

1 week ago 6
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் படம் வெளியான முதல் நாளே வசூலை அள்ளிவிடும். கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் வலம் வருகிறார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இவரது படம் நல்ல வசூலை அள்ளும். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து படத்தில் அவரை நடிக்க வைக்க வரிசை கட்டி தயாரிப்பாளர்கள் நிற்கின்றனர்.

இதையும் படியுங்க : என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

ஆனால் ஜனநாயகன் தனது கடைசி படம், இனி அரசியல் தான் எல்லாமே என விஜய் அறிவித்துள்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியது. ஆனால் அரசியலில் அவர் வந்து நல்லது செய்யட்டுமே என ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாநயகன் படத்தை சீக்கிரமாக முடிக்க விஜய் ஆர்வம் காட்டி வருகின்றார். அனிருத் இசையமைப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

Vijay Sing his Last song in Jana Nayagan Movie

எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்காமல் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே அனிருத் இசையில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது விஜய் தனது சினிமா கேரியரில் பாடும் கடைசி பாடல் என கூறப்படுவதால் ரசிகர்கள் ஆர்த்தோடு காத்துள்ளனர்.

  • Vijay Sing his Last song in Jana Nayagan Movieஜனநாயகன் பட பாடலை தீயாக பாடிய விஜய்…. பட்டையை கிளப்பும் அப்டேட்!
  • Continue Reading

    Read Entire Article