ARTICLE AD BOX
விஜய்யின் கடைசி திரைப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கி வருகிற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஜூன் மாதத்திற்குப் பிறகு விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தவெக தலைவரான விஜய் பல மேடைகளில் திமுகவிற்கு எதிராக களமாடி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் “ஜனநாயகன்” திரைப்படத்தை குறித்து ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.
ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா பிளான்
அதாவது “ஜனநாயகன்” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது பினாமி நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸின் மூலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார். “ஜனநாயகன் படம் ஹிட் ஆனால் கூட இவர்கள் அதனை வாங்கி வேண்டுமென்றே நஷ்டம் செய்வார்கள். ஏனென்றால் விஜய்யின் கட்டுப்பாட்டில் வியாபாரம் இல்லை.
வாரிசு திரைப்படமும் வலிமை திரைப்படமும் ஒரே நாளில் வெளியானபோது வாரிசுக்கு திரையரங்கங்கள் கம்மியாக கிடைத்தன” என்று சவுக்கு சங்கர் தனது வீடியோவில் கூறியுள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.