ARTICLE AD BOX
தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் நடிகை மமிதா பைஜூ. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பிரபலமானவர். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் ரெபல் படத்தில் அறிமுகமாகியிருந்தார்.

தற்போது ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் அவர், சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அடுத்த மாதம் முதல் ஜனநாயகன் அப்டேட் வெளியாகும் என்றும், பல தரமான சம்பவம் இருக்கு என கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் ஆக இந்த படம் அமையும் எனவும், படம் தரமாக உருவாகி வருவதாகவும், விஜய் சாரை வேறு மாதிரி பார்ப்பீர்கள் என ஹைப்பை ஏற்றியுள்ளார்.
