ARTICLE AD BOX
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யாகுமார் என்பவர் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சராக தொடர செந்தில் பாலாஜி விரும்புகிறார் என கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதையும் படியுங்க: பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!
இதையடுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர், நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை, யாரோ ஒருவர் உந்துததலால் அரசியல் காரணங்களுக்காக வித்யாகுமார் மனு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.
சாட்சிகளை கலைக்கவில்லை, யாரையும் அச்சுறுத்தவில்லை, இந்த வழக்கை ரதத்து செய்ய வேண்டும் என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இன்று நீதிபதி சரமாரியாக செந்தில்பாலாஜிக்கு கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா?.

அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியை கலைக்கமாட்டார் என எப்படி கூற முடியும், மெரிட் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை, அரசயிலமைப்பு பிரிவை மீறியதால்தான் ஜாமீன் அளித்தோம் என விளக்கம் அளித்தனர்.
ஜாமீன் என்பது சாட்சியங்களை கலைக்க கொடுக்கப்பட்ட லைசன்ஸ் அல்ல, செந்தில் பாலாஜி சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுக்கிறார் என நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
அதே போல சாட்சியங்களை கலைக்கலாம் என அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க நதிபதிகள் மறுத்தனர். மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் (ஏப் 28) அமைச்சர் பதவியா? அல்லது ஜாமீன் வேண்டுமா? என பதில் அளிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
