ARTICLE AD BOX
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் ஜி வி பிரகாஷ்குமார்.
தற்போது இவர் இசையமைத்து,தயாரித்து நடித்துள்ள கிங்ஸ்டன் ட்ரைலர் பட விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது,அவ்விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன்,பா ரஞ்சித்,சுதா கொங்கரா தயாரிப்பாளர் எஸ் தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிங்ஸ்டன் படம் ஒரு கடலில் நடக்கும் த்ரில் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.இப்படம் ஜி வி பிரகாஷ் நடிக்கும் 25 வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதையும் படியுங்க: அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!
இப்படத்தின் ட்ரைலர் விழாவில் தயாரிப்பாளர் தாணு பேசும் போது தமிழ் சினிமாவில் இளையராஜா,ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்தபடியாக இசையில் அசத்தி வருவது ஜி வி பிரகாஷ்குமார் தான், என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு அவர் உலகத்தரம் வாய்ந்த இசையை கொடுத்திருக்கிறார்,தற்போது கிங்ஸ்டன் படத்தை திரையரங்கில் காண ஆவலுடன் இருக்கிறேன் என பேசியிருப்பார்.
இப்போது இருக்கின்ற தமிழில் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு ஜி வி பிரகாஷும் அனிருத்தும் தான் இசையமைத்து கலக்கி வருகிறார்கள்,இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு,அனிருத்தை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது.