ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!

1 week ago 7
ARTICLE AD BOX

கடலில் சாதித்தாரா ஜி.வி.பிரகாஷ்

ஜி வி பிரகாஷ் நடிப்பில் அவருடைய 25 வது படமாக வெளிவந்த திரைப்படம் தான் கிங்ஸ்டன்,தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில்,பல ஆண்டுகளாக கடலுக்குள் செல்லக்கூடாது என ஒரு நம்பிக்கை உள்ளது.

இதையும் படியுங்க: இனி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு வேலை இல்லை…AI டெக்னாலஜி வைக்கும் ஆப்பு..!

கடலில் செல்ல முயன்றவர்கள் பிணமாக திரும்புவார்கள் என்றும் அந்த கிராமத்தினர் அஞ்சுகிறார்கள்.ஆனால்,அந்த கிராமத்தை சேர்ந்த ஜிவி பிரகாஷ்(கிங்ஸ்டன்),சிறு வயது முதலே கடலுக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டும் என கனவு காண்கிறார்.இதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து பல வேலைகள் செய்து பணம் சம்பாதித்து ஒரு படகு வாங்க திட்டமிடுகிறார்.

GV Prakash horror movie

இந்த கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரவுடி சாபுமோன் அப்துசமாத், ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை தனக்காக வேலை செய்ய வைத்துக்கொள்கிறார்.ஒருநாள்,நடுக்கடலில் சரக்குகளை கைமாற்றும் பொழுது கடற்படை அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார் ஜிவி பிரகாஷ்.

அப்போது தான், அவர் பெட்டிகளில் போதைப் பொருள் உள்ளது என்பதை அறிகிறார்.இதனால்,அங்கிருந்து தப்பி கரை வந்தவுடன்,ரவுடியை கடலுக்குள் அழைத்து சென்று முகாம்போட முடிவு செய்கிறார்.ஆனால், அந்த முடிவே அவரை ஒரு உயிர்ப்பாயான கடல் அச்சுறுத்தலுக்குள் தள்ளுகிறது.

அந்த கடல் எதனால் ஆபத்தானது? ஏன் கிராமத்தினர் கடலுக்குள் செல்ல அஞ்சுகிறார்கள்? இது சாதாரணமான பயம் அல்லது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமா? இதற்கான பதில்களை இயக்குநர் கமல் பிரகாஷ் வித்தியாசமான கடல் பேய்க் கதையாக மாற்றியுள்ளார்.

படத்தின் பிளஸ் & மைனஸ்

ஜிவி பிரகாஷ் ஒரு மீனவ இளைஞனாக அற்புதமாக நடித்துள்ளார், தூத்துக்குடி ஸ்லாங்கை பரவசமாகப் பேசி இருக்கிறார்.திவ்யபாரதி கதையின் இரண்டாம் பாதியில் முக்கியமான பாத்திரமாக இருந்துள்ளார்.சாபுமோன், சேத்தன்,அழகம்பெருமாள்,குமரவேல் ஆகியோர் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவில் கடலுக்குள் நடக்கும் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக காட்டப்பட்டுள்ளன.இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும்,பின்னணி இசை மிரட்டுகிறது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம்,கடலில் பேய் இருப்பதாகச் சொல்லும் புதிய ஹாரர் அனுபவத்தை தருகிறது.கிராபிக்ஸ் மற்றும் ஒளிப்பதிவு தரமான காட்சிகளை வழங்கியுள்ளது.முதலாவது பாதி மீனவ வாழ்க்கையை பிரதிபலிக்க,இரண்டாவது பாதி ஹாரர் த்ரில்லராக மாறியது சிறப்பு.

ஆனால், பல துணைக்கதைகள் மற்றும் ஒவ்வொருவரும் தனித்தனி பிளாஷ்பேக் சொல்லும் போது கதை குழப்பமாகிறது.இரண்டாம் பாதியில் அதிகமான பேய்கள் காட்டுவதால் பயத்தை குறைத்துவிடுகிறது.

இயற்கையான மீனவ வாழ்க்கையும்,கடல் அடியில் இருக்கும் ஒரு திகில் சம்பவத்தையும் இணைத்து இயக்குநர் புதிய முயற்சி செய்துள்ளார்,படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும்,இது புதிய அனுபவம் தரும் ஹாரர் திரைப்படம் என்று கூறலாம். ஹாரர் படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாகப் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

  • No One Replace Captain Vijakanth விஜயகாந்த்னா அது ஒருத்தர்தான்… அவர் இடத்தை ஒருத்தரும் : ராகவா லாரன்ஸ் அதிரடி!
  • Continue Reading

    Read Entire Article