ARTICLE AD BOX
உச்ச நட்சத்திரம்
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல உருவ கேலிகளுக்கு ஆளானார். ஆனால் காலம் செல்லச் செல்ல தன்னை மெருகேற்றிக்கொண்டார். சமீபத்தில் “RRR”, “தேவாரா பார்ட் 2” ஆகிய திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது கேஜிஎஃப் இயக்குனரின் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது இவரை குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

படப்பிடிப்பை முடக்கிப்போடும் சம்பவம்!
ஒவ்வொரு நடிகருக்கும் சண்டை காட்சிகளில் டூப் போடுவது வழக்கம். சம்பந்தப்பட்ட நடிகர்களின் உருவத்தை ஒத்த ஆட்களைத்தான் டூப் ஆக பயன்படுத்துவார்கள். அந்த வகையில் ஜூனியர் என்டிஆருக்கு ஈஷ்வர் ஹரீஷ் என்பவர் பல திரைப்படங்களில் அவருக்கு டூப் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஈஷ்வர் ஹரீஷ் தனக்கு சம்பளம் குறைவாக நிர்ணயிக்கிறார்கள் என வருத்தம் கொள்கிறாராம். மேலும் இனிமேல் ஜூனியர் என்டிஆருக்கு டூப் போட முடியாது என கூறி படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மறுக்கிறாராம். ஆதலால் ஜூனியர் என்டிஆரின் படப்பிடிப்பு முடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.