ARTICLE AD BOX
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

வெளியானது மாஸ் அப்டேட்!
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது வருகிற ஜூன் 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு Chikitu பாடல் வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். மேலும் இதற்கு #Getchikitufied என்ற ஹேஷ்டேக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் தோன்றுகின்றனர். ஏற்கனவே இப்பாடலின் புரொமோ ஒன்று சென்ற வருடம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Time to #GetChikitufied😎 #Chikitu Music Video drops on June 25th at 6 PM 🕺🏼🎶#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/eqZaeMe1qt
— Sun Pictures (@sunpictures) June 23, 2025