ARTICLE AD BOX
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன.
இதையும் படியுங்க: தமிழகத்தில் அதிமுக தான் தலைமை… விஜய் இணைவாரா என்பது விரைவில் தெரியும் : டிடிவி சஸ்பென்ஸ்!
மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்க தற்போதே திட்டம் தீட்டியும், கூட்டணிக்கு பல கட்சிகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டி, இப்போதே மக்களை நேரில் சந்தித்கக சுற்றுப்பணயத்தை அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 7ஆம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து, விழுப்புரம், கடலூர், மயிலாடுமுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூரில் பயணம் செய்ய உள்ளார்.
ஜூலை 21ஆம் தேதி தஞ்சாவூரில் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

5 months ago
59









English (US) ·