ARTICLE AD BOX
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்நாடு மாவட்டம், நல்லப்பாடு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த ஜூன் 18-ம் தேதி ரெண்டபாலா கிராமத்திற்கு அவர் சென்றிருந்தபோது, அவரது வாகன அணிவகுப்பில் சிக்கி ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் சிங்கையா உயிரிழந்தது தொடர்பாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: அங்கன்வாடி பணியாளர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
விபத்தும், வழக்கு மாற்றமும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி செல்லி லூர்து மேரி அளித்த புகாரின் பேரில், நல்லப்பாடு போலீசார் ஆரம்பத்தில் பாரதிய நியாய சம்ஹிதா பி.என்.எஸ். பிரிவு 106(1) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி மற்றும் ட்ரோன் காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனத்தால் நசுக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு பி என் எஸ் பிரிவுகள் 105 (கட்டுப்படுத்தக்கூடிய கொலை) மற்றும் 49 (உயிர் அச்சுறுத்தல்) கீழ் மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக, தாடேப்பள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அலுவலகத்திற்கு நல்லப்பாடு போலீசார் சென்று நோட்டீஸை வழங்கினர்.
ஜெகன் மோகன் ரெட்டி அங்கு இல்லாத காரணத்தால், கட்சியின் அலுவலக பொறுப்பாளரும், எம்.எல்.சி.யுமான அப்பிரெட்டிக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதேபோல், விபத்துக்கு காரணமான ஜெகன் புல்லட் புரூப் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.