ARTICLE AD BOX
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர் அடுத்த ஆண்டரசன்பேட்டை பகுதியில் உள்ள ஜெகன்மூர்த்தியின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
இதையும் படியுங்க: நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!
இந்த நிலையில் திருவள்ளுர் அடுத்த ஆண்டவர்சன் பேட்டை பகுதியில் உள்ள ஜெகன்மூர்த்தியின் வீட்டிற்கு நேரடியாக வந்துள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஜெகன்மூர்த்தியின் மனைவியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.
முன்னதாக பட்டியல் இனத்தின் தலைவரை வேண்டுமென்று கைது செய்யும் முயற்சியில் கைவிட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.