ARTICLE AD BOX
முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி அப்போதைய அதிமுக ஆட்சியில் இருந்ததை சுட்டிக்காட்டினார். தற்போது ரஜினி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பாட்ஷா படம் தயாரித்த ஆர்எம் வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு, ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் பேசிய சூப்பர் ஸ்டார், ஆர்எம்வி தி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி, இதுல அவரை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷம்,. என்னுடன் நெருக்கம், அன்பு, அரவணைப்பு, மரியாதை காட்டியவர்களில் அவரும் ஒருத்தரு,
பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்எம்வி சார். இந்த நான்கு பேர் தான் என்னிடம் அன்பு, அரவணைப்பு, நெருக்கம் காட்டினார்கள். அவங்க இல்லனு நினைச்சு சில நேரத்தல் ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன்.
பாட்ஷா படத்தோட 100வது நாள் விழாவில், வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினேன். அப்போ அதிமுகவில் ஆர்எம்வி சார் அமைச்சரா இருந்தாரு. அப்போ மேடையில நான் அதை பற்றி பேசிட்டேன். அப்போ எனக்கு தெளிவு இல்ல. இதனால ஆர்எம்வியை பதவியில் இருந்தே ஜெயலலிதா தூக்கிட்டாங்க.
மேடையில் அமைச்சர் உள்ள போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் எப்படி சும்மா இருக்க முடியும் என கூறி ஆர்எம்வியை தூக்கிடடாங்க.
இது எனக்கு தெரிஞ்சதும் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன். என்னாலதான் பதவி போச்சுனு எனக்கு அன்னைக்கு தூக்கமே வரல, கால் பண்ணாலும் யாரும் அந்த பக்கம் போன் எடுக்கவே இல்ல.
மறுநாள் காலையில் நேரா ஆர்எம்வி சாரை சந்திச்சேன். சாரி சார் என்னாத தான் இதெல்லாம் ஆச்சு என கூறினார். ஆனா அவரு எதுவுமே நடக்காத மாதிரி, அதெல்லாம் விடுங்க.. மனசுல எதையும் வெச்சிக்காதீங்க, சந்தோஷமாக இருங்க, அடுத்த எங்க ஷீட்டிங் என சாதாரணமா கேட்டாரு. எனக்கு அந்த தழும்பு போகல, ஏன் என்றால் நான் கடைசியா பேசினது.
— Suresh balaji (@surbalutwt) April 9, 2025மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் இந்த காரணம் முக்கியமானது என ரஜினி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.