ARTICLE AD BOX
தாறுமாறு கலெக்சன்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். ஜனரஞ்சக ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தின் மீது பல விமர்சனங்கள் வைத்தாலும் அஜித் ரசிகர்கள் “இது எங்களுக்கான படம்” என கூறி அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

இத்திரைப்படம் வெளியான ஐந்து நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது வரை உலகளவில் ரூ.230 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயிலரை முந்துமா?
ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. தற்போது வரை “குட் பேட் அக்லி” தமிழகத்தில் மட்டும் ரூ.180 கோடிகள் வசூல் செய்துள்ள நிலையில் இத்திரைப்படம் “ஜெயிலர்” படத்தின் வசூலை முறியடிக்குமா என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
