ARTICLE AD BOX
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி
பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய “டப்பா கார்டெல்” என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.இந்த தொடரில்,அவர் நடித்த சில காட்சிகள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.
இதையும் படியுங்க: நான் சொல்றத செஞ்சு காட்டுங்க..இந்திய அணிக்கு சவால்..முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா,திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டு விலகினார்.
ஆனால்,சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் தமிழ் சினிமாவில் “36 வயதினிலே” படம் மூலம் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.அதன் பிறகு, “மகளிர் மட்டும்”, “காற்றின் மொழி”, “ஜாக்பாட்” உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இப்போது, அவர் முழு கவனத்தையும் பாலிவுட் மற்றும் வெப் தொடர்களில் செலுத்தி வருகிறார்.தற்போது “டப்பா கார்டெல்” என்ற வெப் தொடரில், சிகரெட் புகைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா, ரசிகர்களிடையே கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் “இது ஜோதிகாவா?” என ஆச்சரியப்பட்டு விவாதித்து வருகின்றனர்.