ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலையை ஆடியோ ரிலீஸ் செய்ய சொல்லுங்கள்.. அமைச்சர்!

3 weeks ago 35
ARTICLE AD BOX

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா , அரசு தலைமை மருத்துவமனையில் 3.70 கோடியில் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதையும் படியுங்க: கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து விழுப்புரத்தில் வந்தவர் திண்டிவனம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ,இறப்புக்கு மெடிக்கல் காரணம் என்ன என்று கேட்டுள்ளோம் ,இதனால் அவர் உயிரிழப்பு கொரோனா இறப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது முழுமையான விவரங்கள் தெரிந்து பிறகு சொல்கிறோம் என்றார்.

வீரியம் இழந்த கொரோனா தான் ஒமிகரான் என்றும் பொது இடங்களில் செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் , இணை நோய் உள்ளவர்கள்,வயது முதிர்ந்தவர்கள் முகக்கவசம் போட்டு கொள்வது நல்லது என்றார்.

தமிழக சுகாதாரத்துறை எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளதாகவும் , 94ஆயிரம் படுக்கைகள், 3ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதிகள் உள்ளன என்றார்.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் சண்முகம் என்கிற வட்ட செயலாளர் பேசியதாக அண்ணாமலை சொல்கிறார், ஆனால் ஞானசேகரன் என்க்கு முழுமையாக தொடர்பு இல்லை ஒருமுறை கூட போனில் பேசியதில்லை என்றார்.

சென்னையில் மழை வெள்ளத்திற்கு சென்ற போது காலை உணவை வட்ட செயலாளர் வீட்டின் முன்பு சாப்பிட்டோம் , அப்போது ஞானசேகரன் போட்டோ எடுத்தார். அவ்வளவ நான் என்றும் கோட்டூர் சண்முகம் என்னை தொடர்பு கொண்டது நலத்திட்ட உதவிகளை வழங்க வருமாறு அழைத்தார் என்றார்.

அண்ணாமலை கோட்டூர் சண்முகத்துடன் நான் பேசியதாக சொல்லும் போது நான் என்ன பேசினேன் என ஆடியோவையும் வெளியிடலாம் என்றார்.

  • Ilayaraja spoke emotionally about the harmonium box he bought in Coimbatore!! கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!
  • Continue Reading

    Read Entire Article