ARTICLE AD BOX
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணம் செலுத்தி தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மலையற்றத்திற்கு செல்ல முடியும்.
இந்நிலையில் டாப்ஸிலிப் பகுதிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சால் செயின் (26),மற்றும் ஃபாத்தில் (27) ஆகிய இருவரும் டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள டாப்ஸ்லிப் – ஆனகரி சோலா வழியாக பண்டாரப் பாறை வரை டிரக்கிங் செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்து டாப்ஸ்லிப் பகுதிக்கு நேற்று டிரக்கிங் வந்துள்ளனர்.
அவர்களுடன் மலைப்பாதை வழிகாட்டியான சந்தான பிரகாஷ் மற்றும் அஜித்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். எட்டு கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் நடுவே மலையற்றத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் மாலை டாப்ஸ் பகுதிக்கு திரும்பி வரும்போது மருத்துவர் அப்சலுக்கு மற்றும் ஃபாதிலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அருகில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன் புதூர் பகுதிக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு அஜ்சலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரோடு வந்த பாதிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன் புதூரில் கேரள மருத்துவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
