ARTICLE AD BOX
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டவிரோதமாக சோதனை நடந்ததாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படியுங்க: காஷ்மீரில் கொத்து கொத்தாக சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை : எந்த மதம் என கேட்டு சுட்ட தீவிரவாதிகள்..!
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று நீதமன்றம் அளித்த தீர்ப்பில், டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தலாம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என்று தீர்ப்பளித்தது.

இதனால் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதால் அடுத்தக்கட்ட சோதனை நடக்கலாம் என கூறப்படுகிறது.