டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

2 weeks ago 18
ARTICLE AD BOX

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

இதற்கு பேரவை தலைவர் அனுமதி மறுத்ததை கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டாஸ்மாக் நிறுவனம், மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் பத்திரிக்கை செய்தி வெளியானது

இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு கேட்டோம். மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால் தான் உரிய பதில் கிடைக்கும் என்று, இன்று பேரவையில் பேச முயன்றோம் ஆனால் இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்கு பேரவை தலைவர் முழுமையாக அனுமதியை மறுத்து விட்டார்

ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கை குறித்து, இதுவரையில் தமிழக அரசின் சார்பிலோ, துறை சார்ந்த அமைச்சர் சார்பிலோ இதுவரையில் விளக்கம் அளிக்காதது ஏன்

இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்காததை பார்க்கும் பொழுது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உண்மை தானோ என்று என்ன தோன்றுகிறது

இன்றைக்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உட்பட்ட மதுபான விற்பனை கடைகளில், ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது – அப்படியென்றால், ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் இந்த அரசு மதுபான கடைகளின் மூலமாக ஊழல் செய்து பல்வேறு தரப்புக்கு போயிருக்கின்றது இந்த பணம். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய் என்றால், ஒன்றரை கோடி பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால், பதினைந்து கோடி ரூபாய் ஆகும். 30 நாட்களுக்கு 450 கோடி ஆகிறது. இந்த ஆட்சியில், இந்த மதுக்கடை விற்பனை மூலமாக 12 மாதத்திற்கு கிட்டத்தட்ட 5400 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரியவருகிறது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக்காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்

அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையால், தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால், சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கவும் சிரமமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர், இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு தொழில் தொடங்க சென்று விட்டனர்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது

இதனைப் பார்க்கும் பொழுது 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி தான் என்றார்

  • samantha in relationship சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?
  • Continue Reading

    Read Entire Article