ARTICLE AD BOX
மாலையும் கழுத்துமாக டிடிஎஃப் வாசன் திருமண வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சின்னத்திரை வழியாக பிரபலமான ஜோயா, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து பலரின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது அவர் ‘சமையல் எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியில் தனக்கென ரசிகர்களை அதிகம் குவித்து வருகிறார்.
இதற்கிடையில், ஜோயா மற்றும் டிடிஎஃப் வாசன் இடையே காதல் நடக்கிறது என்ற தகவல்கள் முன்பு வெளியாகியிருந்தன. மேலும், வாசனின் பிறந்தநாளில் அவர் மீது காட்டிய சிறப்பு அன்பு அந்த செய்திகளை மேலும் வலுப்படுத்தியது.
இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் வெளியாகியதும், “இவர்கள் காதலில் இருக்கிறார்கள்” என்றே பலரும் கருதினர்.
ஆனால் எதிர்பாராத முறையில் டிடிஎஃப் வாசன் தான் தனது மாமன் மகளையே திருமணம் செய்ய உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக காதலில் இருந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முன்னறிவிப்பு இல்லாமல் திருமணம் செய்ததால் TTF Vasan கைது🤣🤣😆 pic.twitter.com/JrTFmSENPs
— Swetha™ (@SwethaLittle_) September 16, 2025சமீபத்தில் வெளியான வீடியோவில், அவருடைய மாமன் மகள் மாலை, மங்கல்யம் சூட்டிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஆனால், இன்னும் அவர் தனது காதலி மனைவியின் முகத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஜோயாவைப் பற்றிய செய்திகள் குறித்து ரசிகர்கள் தேடி ஆரம்பித்துள்ளனர். மணப்பெண் யார் என்பது குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்,.

1 month ago
36









English (US) ·