ARTICLE AD BOX
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப்
ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ட்ராகன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக இறங்கியது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு,நடிகர் பிரதீப் மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர்,அப்போது லவ் டுடே படத்தில் வருவது போல் பிரதீப்பும் கயாடுவும் தங்களுடைய செல்போன்களை மாற்றிக்கொண்டனர்.
அப்போது கயாடுவின் போனில் தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக கயாடு வருவார் என்ற மீம் ஒன்றை அவரை உருவாகி வைத்துள்ளதாக பிரதீப் தெரிவித்தார்,அதற்கு கயாடு தனக்குத்தானே PR வேலை பார்ப்பதாக சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
Wtfff!! 😭😭😭😭 pic.twitter.com/0nrpBEW2fs
— EpicCommentsTelugu (@EpicCmntsTelugu) February 23, 2025இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது