‘டிராகன்’ படத்தால் VJ சித்துக்கு அடிச்ச லக்..!

1 month ago 30
ARTICLE AD BOX

ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து

தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த வகையில்,யூடியூப் மூலம் பிரபலமான VJ சித்து,தற்போது திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!

சமீபத்தில், “டிராகன்” படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்த இவர்,ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.இந்நிலையில், தற்போது அடுத்த லெவெலுக்கு முன்னேறியுள்ளார்.

அதாவது VJ சித்து ஹீரோவாக விரைவில் அறிமுகம் ஆக உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இப்படத்தை இவரே இயக்கவும் செய்கிறாராம்,இதனால் இந்த முயற்சி இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் ரசிகர்கள் சித்துவின் வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர்.

  • ‘டிராகன்’ படத்தால் VJ சித்துக்கு அடிச்ச லக்..!
  • Continue Reading

    Read Entire Article