ARTICLE AD BOX
STR 49 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கயாடு லோகர்
நடிகை கயாடு லோகர்,டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தற்போது தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்க: ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!
இந்த நிலையில் அவர் சிம்புவின் 49வது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது,இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்க,டான் பிக்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்ற உள்ளார்.

முன்னதாக,இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது,ஆனால் சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்ததால்,தற்போது கயாடு லோகர் இதில் நடிக்க இருக்கிறார்.இவருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.மேலும்,இப்படத்தில் நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துபாயில் தொடங்க உள்ளது.இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது,டிராகன் வெற்றிக்கு பிறகு,கயாடு லோகருக்கு கோலிவுட்டில் பல பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன,இதனால் STR 49 திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
