டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

1 month ago 31
ARTICLE AD BOX

எகிறும் எதிர்பார்ப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

good bad ugly trailer release on 4th april

பட்டையை கிளப்பிய சிங்கிள் பாடல்கள்

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முதல் சிங்கிளான “OG சம்பவம்” கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ரசிகர்களை குதூகலப்படுத்திய ரணகள பாடலாக அமைந்தது. இப்பாடலை ஜிவி பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். 

இப்பாடலை தொடர்ந்து இரண்டாவது சிங்கிளான “God Bless U” பாடல் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அனிருத் குரலில் வெளியான இப்பாடல் களைகட்டும் பாடலாக அமைந்தது. இதனை தொடர்ந்து “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்தான ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வருகிற 7 ஆம் தேதி “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளிவரவுள்ளதாம். மேலும் இத்திரைப்படத்தின் டிரைலர் வருகிற 4 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

good bad ugly trailer release on 4th april

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

  • good bad ugly trailer release on 4th april டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…
  • Continue Reading

    Read Entire Article