ARTICLE AD BOX
டிரெண்டிங் நடிகை
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் குஷ்பு இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தார். இந்த நிலையில் திடீரென அவரது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

எல்லாமே போச்சு
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் “நண்பர்களே, எனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் டிவிட்டர் கணக்கிற்குள் உள்ளே நுழையமுடியவில்லை. எனது டிவிட்டர் கணக்கை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது டிவிட்டர் கணக்கில் எதாவது பதிவுகள் பதிவேற்றப்பட்டால் தயவு செய்து என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். விரைவில் உங்களை டிவிட்டரில் சந்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இச்செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஷ்பு தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.