ARTICLE AD BOX
திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38). இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு செய்தார்.
இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்க: மகன் இறந்த 3 மாதத்தில்..பாரதிராஜா வீட்டில் அடுத்த சோகம்.. ஒரு மனுசனுக்கு இப்படியா நடக்கணும்..!!
இதில், ஸ்டாலின் தாராபுரம் பகுதியில் டீக்கடையில் வேலை செய்வது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு சென்ற திண்டுக்கல் காவல்துறையினர் ஸ்டாலினை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதில் ஸ்டாலின் குடி போதைக்கு அடிமையாகி இருப்பதும் கடந்த வருடங்களில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஸ்டாலினை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Naxalites, Support for Naxalites, Tea Master Arrest, டீக்கடை ஊழியர் கைது, நக்சலைட்டுகளுக்கு ஆதரவு