டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

1 week ago 7
ARTICLE AD BOX

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் அடுத்த கிரிமேடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (24). இவர், ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். மேலும், வீட்டில் இருந்தபடியே பிரவுசிங் சென்டரும் நடத்தி வருகிறார்.

மேலும், இவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரம்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வருகிறார். ஒருகட்டத்தில், இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், காதலிக்கும் இருவரும் அண்ணன் – தங்கை முறை எனச் சொல்லி உள்ளார்.

எனவே, ரம்யாவுடனான காதலையும் கைவிட்டு, அவருடன் பேசுவதையும் ஜெயசூர்யா நிறுத்தி விட்டார். ஆனால், ரம்யா தன்னைக் காதலிக்குமாறு ஜெயசூர்யாவை கட்டாயப்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கைகளை பிளேடால் சேதப்படுத்திய போட்டோக்களை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

Tea

ஆனால், அப்போதும் ஜெயசூர்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி மாலை ஜெயசூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ரம்யா, கேஷூவலாக பேசி, டீ போட்டு தரட்டுமா? எனக் கேட்டு, சமையலறைக்குச் சென்று டீ போட்டுள்ளார்.

அப்போது, தான் கொண்டு வந்திருந்த எலிபேஸ்ட்டையுடம் கலந்து, அதை ஜெயசூர்யாவுக்கு சிரித்துக்கொண்டே தந்துள்ளார். ஆனால், இதை அறியாத ஜெயசூர்யா டீயைக் குடிக்க, இரவு 9.30 மணிக்கு வாட்ஸ்அப்பில், உடம்பில் ஏதேனும் பிரச்னை இருக்கா? என ரம்யா கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயசூர்யா ஆம் என பதிலளித்துள்ளார். இதனையடுத்து, “ஒன்றுமில்லை, நான் தான் டீயில் எலிபேஸ்ட்டைக் கலந்து தந்தேன் என்று சொல்லி சிரித்துள்ளார் ரம்யா. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசூர்யா, வாந்தி எடுக்க முயன்றுள்ளார். ஆனால், இரவு 11 மணிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, மடப்பட்டு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசூர்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஜெயசூர்யாவின் உடல் மிகவும் மிகவும் மோசமடையவும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

தற்போது ஒரு மாத காலமாக ஜெயசூர்யாவுக்கு சிகிச்சை நடக்கிறது. ஆனால், ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இதுவரை ரம்யாவை காட்டிக் கொடுக்காத நிலையில், அவரின் தொலைபேசியை பெற்றோர் சோதனை செய்துள்ளனர்.

அப்போதுதான், ரம்யாவின் வாட்ஸ்அப் மெசேஜ் படித்து பார்த்து, விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்தப் புகார் குறித்து திருவெண்ணைய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், ரம்யா உள்பட அவரது குடும்பம் தலைமறைவானதால், அவர்களைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

  • Ajithkumar action scenes ஹோட்டல மாத்துங்க.. கறாராக சொன்ன அஜித்.. அதிர்ச்சியில் கோலிவுட்!
  • Continue Reading

    Read Entire Article