டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

1 month ago 46
ARTICLE AD BOX

இன்னும் 3 நாள்தான் மாமே…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran

GBU டைட்டில் வைச்சதே அஜித்சார்தான்…

ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரிடம் இத்திரைப்படத்தின் டைட்டில் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது “Good Bad Ugly, இந்த டைட்டில் எப்படி இருக்கு?” என அஜித் கேட்டாராம். அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “சூப்பர் சார்” என கூற, அதற்கு அஜித், “சும்மா சொல்லாதீங்க” என்றாராம். 

“சார், நிஜமாவே  செம டைட்டில் சார், இதை லாக் பண்ணிடலாம்” என கூறி உடனே தனது டைரக்சன் டீமிற்கு போன் செய்து இதனை கூற, அவர்களுக்கும் இந்த டைட்டில் பிடித்துவிட்டதாம். இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளது. 

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்
  • Continue Reading

    Read Entire Article