ARTICLE AD BOX
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி
விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். வெளிநாட்டில் பிலிம் டெக்னாலஜி பயின்ற ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெளியான திடீர் வீடியோ
இந்த நிலையில் இன்று சந்தீப் கிசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு கைத்தேர்ந்த இயக்குனரை போல் ஜேசன் சஞ்சய் இத்திரைப்படத்தை இயக்குவது காட்டப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கிய போது பலரும் “இவருக்கெல்லாம் டைரக்சன் தெரியுமா?” என ஏளனமாக விமர்சித்தனர். இந்த நிலையில்தான் இந்த வீடியோ அந்த விமர்சனத்திற்கெல்லாம் பதிலடியாக அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.