த.வெ.க.வுடன் கூட்டணி..? விஜய் பாணியில் பதில் கொடுத்த சீமான்.. 2026ல் சம்பவம் இருக்கு!

11 months ago 187
ARTICLE AD BOX
Vijay

தவெகவுடன் கூட்டணி.. விஜய் பாணியில் பதில் கொடுத்த சீமான்.. 2026ல் சம்பவம் இருக்கு!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார்.

மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்வியும் பல அரசியல் தலைவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் “2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சீமான், இந்த கேள்விக்கு என்னுடைய தம்பி சொல்வதை போல நான் சொல்லவேண்டும் என்றால் ‘i americium waiting’ (காத்திருக்கிறேன்). தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் அங்கு செல்வேன் என சீமான் கூறினார்.

மேலும் படிக்க: ஒட்டுமொத்தமா வரோம்.. முடிந்தால் கைது செய்யுங்க.. பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!!

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் ” நீங்களும், விஜய்யும் இரகசியமா சந்தித்ததாக செய்திகள் வெளியாகிறது இது உண்மையா? என்று கேட்டனர். அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் கூறிய சீமான் ” இரகசியமா சந்திக்க நாங்கள் இருவரும் என்ன கள்ளக்காதலர்களா?

நான் அண்ணன் அவர் என்னுடைய தம்பி. அண்ணன் தம்பி சாதாரணமாக சந்திப்பதை போல நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்வோம் அவ்வளவு தான் எனவும் பதில் அளித்தார்.

The station த.வெ.க.வுடன் கூட்டணி..? விஜய் பாணியில் பதில் கொடுத்த சீமான்.. 2026ல் சம்பவம் இருக்கு! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article