ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் வயது 30. இவரது மனைவி அபிராமி வயது 25. இருவருக்கும் அஜய் என்ற 6 வயது மகனும், கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர்.
அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம், வயது 25, என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக பழகி வந்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை கொடுத்து இல்ல தலையணை வைத்து அமுக்கி கொடூர கொலை செய்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக, அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்தையும், குன்றத்துார் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார். விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார்.

பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, காதலன் மீனாட்சி சுந்தரத்தையும் குற்றவாளி என அறிவித்தனர்.
தண்டனை விபரங்களை அறிவித்த நீதிபதி, அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார்.
இதைக் கட்டதும், அபிராமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். சிறைக்கு அழைத்துச் சென்ற போது முகத்தை மூடியபடி கண்ணீர் விட்டு அழுது சென்றார்,
