ARTICLE AD BOX
மணிரத்னம்-கமல் கூட்டணி
“நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை மணிரத்னம், கமல்ஹாசன், ரெட் ஜெயின்ட் நிறுவனத்தார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் சிங்கிள்
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்தான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது கமல்ஹாசன் தனது குரலில் பாடியுள்ள பாடல் முதல் சிங்கிளாக வெளிவரவுள்ளது. இதற்கான புரொமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இந்த சிங்கிள் பாடல் வருகிற 25 அல்லது 27 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.