தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

1 week ago 21
ARTICLE AD BOX

சுமாரான வரவேற்பை பெற்ற படம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படமாக அமைந்தது. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் “நாயகன்” படத்திற்குப் பிறகு 37 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.

sad situation for simbu after thug life movie release

ஆனால் இத்திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திரைக்கதையிலும் சரி கதையிலும் சரி சுத்தமாக சுவாரஸ்யமே இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ரூ.300 கோடி செலவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ரூ.90 கோடியே வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ய வாய்ப்புகளே இல்லை என தெரிய வருகிறது. 

சிக்கலில் நடிகர் சிம்பு

இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, “சிம்புவை பொறுத்தவரை தக் லைஃப் திரைப்படத்தின் மீது அவருக்கு அபார நம்பிக்கை இருந்தது. இந்த படம் வந்த பிறகு நமது லெவலே வேற என்று நினைத்தார். அந்த வகையில் இவர் சமீபத்தில் ஒப்பந்தமான எந்த திரைப்படத்திற்குமே சம்பளத்தை பற்றி முடிவெடுக்கவே இல்லையாம். 

சம்பளம் என்ன என்பதை தக் லைஃப் படம் வெளியானதற்கு பின்பு முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவந்தாராம். ஆனால் தக் லைஃப் படத்தின் ரிசல்ட் இவ்வளவு மோசமாக ஆனதினால் சிம்புவுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆனால் படம் தோற்றாலும் ஜெயித்தாலும் ஹீரோக்கள் சொல்வதுதானே சம்பளம்” என்று இத்தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

sad situation for simbu after thug life movie release

“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு ரொமான்டிக் டிராமா திரைப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • sad situation for simbu after thug life movie release தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!
  • Continue Reading

    Read Entire Article