ARTICLE AD BOX
ஜிங்குச்சா பாடகி
“தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா என்ற பாடல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் தெலுங்கு வெர்ஷனை பாடியவர்தான் பாடகி மங்லி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வருபவர்.
இந்த நிலையில் தனது 31 ஆவது பிறந்தநாளை நேற்று இரவு பார்ட்டி வைத்து கொண்டாடிய பாடகி மங்லி மீது தேசிய போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
பாடகி மங்லி ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் பார்ட்டியில் கஞ்சா மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹைதராபாத்திற்கு அருகே உள்ள செவேல்லா என்ற பகுதியில் அமைந்துள்ள திரிபுரா ரிசார்ட்டில் இவரது பிறந்தநாள் விருந்து ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.
இந்த பார்ட்டியில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பாடகர்களும் பல சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மங்லி ஏற்பாடு செய்திருந்த இந்த பார்ட்டியில் கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் பார்ட்டி நடைபெற்ற இடத்திற்குச் சென்று போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்ட்டியில் கலந்துகொண்ட 48 பேரில் 9 பேர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை வஸ்துக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த பாடகி மங்லி மீது தேசிய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பார்ட்டியில் பிரபல தெலுங்கு பாடகி திவி, பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம் ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 months ago
52









English (US) ·