தக் லைஃப் படத்தால் ஜனநாயகனுக்கு ஆபத்து.. தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் என எதிர்ப்பு!

4 weeks ago 23
ARTICLE AD BOX

மணிரத்னம் இயக்கத்தில் கமல், திரிஷா, சிம்பு, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையே தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் போது கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்ற இந்த விழாவில் கமல் பேசியதாவது, தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறினார்.

இதையும் படியுங்க: கன்னட மொழி விவகாரத்தில் மன்னிப்பு? கமல்ஹாசன் வெளியிட்ட திடீர் அறிக்கை!

இதற்கு நடிகர் சிவராஜ்குமாரும் தலையை ஆட்டினார். இந்த பிரச்சனை கர்நாடகாவில் சர்ச்சையாக வெடித்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என போர்க்கொடி தூக்கினர்.

மேலும் தக் லைஃப் படத்துக்கு தடை விதிப்பதாக கர்நாடக ரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதை எதிர்தது படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, மொழி குறிதது பேச கமல் என்ன மொழி ஆய்வாளரா இல்லை வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பினர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்தது. ஆனால் கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மன்னிப்பு கேட்க முடியாது, தவறு செய்தால் கேட்கலாம் ஆனால் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்தனர்.

இதையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக அரசு, கர்நாடக ஃபிலிம் சேம்பர் மற்றும் கமல் தரப்பினர் கலந்து பேச வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.

Jananayagan movie will not be released in Tamil Nadu... Growing support for Kamal!

இந்த நிலையில் கமல் பேசிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் இங்கு ஜனநாயகன் படம் ஓடாது என கமலுக்கு ஆதரவாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.

சாதி, மத, கட்சி பேதமின்றி கமலுக்க ஆதரவு குவிந்து வரும் நிலையில், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை திரையிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை பெங்களூருவை சேர்ந்த KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் ஜனநாயகன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என X தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  • thug life movie not released in karnataka தள்ளிப்போனது தக் லைஃப் வெளியீடு; ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த கமல்!
  • Continue Reading

    Read Entire Article