தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

1 week ago 23
ARTICLE AD BOX

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என கர்நாடகா பிலிம் சேம்பர் கூறியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியது. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் அத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

supreme court told that put case on who ever try to stop the release of thug life movie

இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “திரைப்படம் வெளியாகும்போது வன்முறை ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும். திரைப்படம் வெளியாகும் திரையரங்கத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறியுள்ளது.

மேலும், “கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்திற்கு யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளது. இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகும் திரையரங்களில் பாதுகாப்பு அளிப்போம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது கர்நாடக அரசு. எனினும் இத்திரைப்படம் தமிழ்நாட்டிலேயே தோல்வியடைந்ததால் இதனை வெளியிட மாட்டோம் என கர்நாடக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனராம்.  

  • supreme court told that put case on who ever try to stop the release of thug life movie தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி
  • Continue Reading

    Read Entire Article